கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் “தர்ம சாலை” எனப்படும் இடம் அமைத்துள்ளது. இங்குச் சாதி மதபேதமின்றி வரும் அனைவருக்கும், ஒரு நாளில் நான்கு வேலை இலவசமாக உணவளிக்கப்படுகிறது. வள்ளலாரால் நெருப்பேற்றி துவக்கி வைக்கப்பட்ட இவ்விடம், சுமார் 150 வருடங்களாக அவர் ஏற்றிய நெருப்பை அணைக்காமல் பசித்தோருக்கு உணவளித்து வருகிறது. இவ்விடத்தை பற்றி “பசித்தோர்” என்ற தலைப்பில் ஒரு சிறு-ஆவணப்படம்.
