ஓர் இரவு சென்னையிலிருந்து பயணித்து மைசூர் சென்றடைந்தேன். ரெயில் நிலையத்தின் வாசலை இரண்டு மலபார் ஹார்ன்பில்கள் என்னை வரவேற்றது. முந்தைய பயணங்களில் அதைத்தேடி அலைந்தபொழுது கண்களில் சிக்காதது அன்று தற்செயலாய் தென்பட்டது. பறவைகள் சென்ற திசையிலேயே கண்களை அலைபாயவிட்டுக் கொண்டே இடத்தை விட்டு நகர்ந்தேன். பேய்ந்து ஓய்ந்த மழையின் மண்வாசமும் மைசூரின் மிதமான குளிரும் வசீகரித்தது. சிறு வயதில் என் தந்தை என்னை விட்டு மைசூர் சென்று வந்ததை இன்றும் மனதில் கொல்வேன். அங்கிருந்து எனக்காக “Printed Post Cards ” வாங்கி வந்தார். அது என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு கார்டு, அது “ஓர் ஆளும் புலியும் சண்டை இடுவது போல் உள்ள ஓவியம்” – அதைப்பற்றி தந்தையிடம் கேட்ட பொழுதுதான் மைசூரின் புலியென கருதப்பட்ட மாவீரன் திப்பு சுல்தான்; பற்றி அறிந்தேன். இன்றுதான் வருடங்கள் கழித்து திப்பு சுல்தான் ராஜ்யத்தின் தலைநகரான செரிங்கப்பட்னாவிற்கு(ஸ்ரீரங்கப்பட்டினம்) செல்லும் வாய்ப்பு கிட்டியது. மைசூரிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது இன்றைய ஸ்ரீரங்கபட்ணா.
நம் விடுதலைப் போராட்டத்தில் முதன்மை வீரனாகவும் ஆங்கிலேயரின் முதன்மை காலகட்டங்களியே
அவர்களை எதிர்த்து சவால் தந்தவர்களில்ஒருவராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான் தனது 15வது வயதில்
தனது தந்தையுடன் முதல் ஆங்கிலோ மைசூர் போரில் ஆங்கிலயர்களை எதிர்த்துப் போராடி பெருமைசேர்த்தவர். புலிகள் தான் திப்பு சுல்தானின் ராஜ்யசின்னம்! அவருக்குப் புலிகளின் மேல் ஈர்ப்பு அதிகம். கோட்டையின் சிற்பங்களில் தொடங்கி தனது இருக்கை, வாகனம் கொடிகள், ராஜ்யசின்னம், சிப்பாய்களின் உடைகள் வரை அனைத்திலும் புலிகளைக் கானலாம். அவர் தனது செரிங்கப்பட்டிண கோட்டையின்உள்ளே 6 புலிகளை வளர்த்து வந்தார்.
புலிகளின் பிரியர் என்பதால் மட்டும் அவரை மைசூரின் புலி என்று அழைக்கப்படுவதில்லை, அவர் ஒரு நாள் காட்டில்வேட்டைக்குச் சென்றபொழுது ஒரு புலியை நேருக்கு நேராக மோத நேர்ந்தது. அது தன் மேல் பாயும் நேரத்தில் துப்பாக்கி இயங்காமல் போனதால் தனதுசிறிய கத்தியை வைத்து புலியை வென்றார். இதுவே அந்த வீர பட்டத்திற்கு காரணம். என்னதான் வேட்டைக்குச் சென்றாலும்
புலியிடனமிருந்து தன்னைக்காப்பாற்றிக்கொள்ளவே அதை வேட்டையாடினார் இந்நிலையில் ஆங்கிலேயர்கள் வீரத்தின் பெயரில் தொடர்ந்து நடத்திவந்த புலிகள் வேட்டையைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாததால் அவர் அதை எதிர்க்கும் வகையில் ஒரு ஆங்கிலேயனை ஒரு புலி தாக்கி வீழ்த்தயது போன்ற ‘ஆடோமேடான்” எனக் கூறப்படும் தானியங்கி பொம்மையை வடிவமைத்து தன் கோட்டையின் வாசலில் பார்வைக்கு வைத்திருந்தார். அப்பொம்மையில் மனிதன் மற்றும் புலிக்கு சப்தம்கொடுப்பதற்காக 2 சேனல்கள் வழியே சப்தம் வெளியே கேட்கும் வகையில் 7 கீக்கள் கொண்ட
“OrganKeyboard” போன்ற இசைக்கருவியுடன் பொருத்தப்பட்டிருக்கிறது. இது பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு தற்போதைய லண்டன் ராயல் ஆர்ட்டிலரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த அருங்காட்சியகத்தின் விசேஷ அம்சமாகவும் மக்களின் கவனத்தை கவரும் வகையில் இருக்கும் இப்பொம்மை அன்றைய காலகட்டத்தின் நுணுக்கங்களுடன் நேர்த்தியாய் செதுக்கப்பட்ட ஒரு மாஸ்டர் பீஸ் என்றே கூறலாம்.
நுழைவாயிலுக்குச் செல்வதற்கு முன்பே கோட்டையின் சிதறல்கள் வீரத்தின் மிச்சமாகவும், நம் சுதந்திரபோராட்டத்தின் அடையாளமாகவும் தோன்றியது. இத்தகைய போராட்டத்தின் முடிவும், இந்த வீர மண்ணின் மிச்சமும்,அன்னியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதா? என்ற கேள்வியை மனதில் சிதறவிட்டு, அங்குப் பெட்டிக்கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் குளிர்பானங்களை
பார்த்துககொண்டே வாசலில் நுழைந்தேன்.
கோட்டையின் உள்ளேயுள்ள திப்பு சுல்தானின் மசூதிக்கு வந்தடைந்தேன். அந்தக் காலகட்டத்தின் இஸ்லாமிய கட்டமைப்பில் நேர்த்தியாய் செதுக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவுடன் புறாக்கள் மசூதியைச் சுற்றிவந்து அதன் தூண் களில் மேல் சூழ்ந்தமர்ந்தது . திப்புசுல்தான் இங்கிருந்துதான் செய்தி பரிமாற்றத்திற்காகப் புறாக்களை தூதுவிடுவதற்காக வளர்த்து வந்தார். இந்த மசூதியே தபால் மையமாகத் திகழ்ந்தது. மசூதியில் நமாஸை சரியான நேரத்திற்குச் செய்வதற்காக தொழுகை அறையின் எதிரே சூரிய நிழலைவைத்து இயங்கப்பட்ட “Orbit Clock ” அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நேரக்கணக்கில்தான் மணி அடிக்கப்பட்டு மக்கள் தொழுகைக்கு ஒன்று கூடுவார்கள். இது இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த கடிகாரங்களில் ஒன்று.
மசூதியிலிருந்து 2 கீ.மீ தொலைவில் ஸ்ரீ ரங்கநாதன் ஸ்வாமி ஆலயம் உள்ளது . கி.பி 9ஆம் கங்கா ராஜ்யத்தின் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட இக்கோவில் ரங்கநாதஸ்வாமியின் மூன்று திருத்தலங்களில் மத்திய ஸ்தலமாய் திகழ்கிறது. பழமைவாய்ந்த இக்கோவிலின் எதிரேதான் திப்பு சுல்தானின் அரண்மனை. அதில் அவர் பதுக்கி வைத்திருக்கும் தங்கம் மற்றும் பல விலை உயர்ந்த பொருட்களுக்காக ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டு இன்று இடிபாடுகள் மட்டுமே மிஞ்சியுள்ளது. அரண்மனையில் இருந்து தங்கம், வைரம் மற்றுமின்றி போர் இயந்திரங்களும், ஏவுகணைகளும் கண்டெடுக்கப்பட்டது . அவர் அரண்மனையில் உபயோகித்த அனைத்துப் பொருட்களும் தங்கத்தால் ஆனவை ‘சேரிங்கம்” என்றால் தங்கம் என்று பொருள் – எனவேதான் அவர் ராஜ்ஜியம் சீருக்கும், செழிப்புக்குப் பெயர் பெற்றதால் செரிங்கப்பட்டிணம் என்று பெயர் சூட்டப்பட்டது. திப்பு சுல்தானின் ராஜ்ஜியம் கிருஷ்ணா நதியில் தொடங்கி அரபிக்பெருங்கடல் வரை படர்ந்திருந்தது. இந்தச் சங்கமம் போலவேதான் அவர் ராஜ்ஜியத்தில் மதவேறுபாடின்றி சங்கமித்து வாழ்ந்தனர். 2000 வருடப் பழமை வாய்ந்த கோவிலை அகற்றாமல் அதைக் கட்டிக்காத்ததே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
திப்பு சுல்தான் கோடைகாலவெப்பத்தை தவிர்க்க தனியாய் ஓர் அரண்மனையை அமைத்திருந்தார். குதிரை வண்டிகள் இங்கு பிரபலம் என்பதால் கோவிலிலிருந்து சம்மர் பேலஸ்க்கு குதிரை வண்டியில் சென்றடைந்தேன். இவை நம்மை இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னே அழைத்து செல்வது போல தோன்றுகிறது. இந்த கோடைகால அரண்மனை Indo – Islamic வடிவமைப்பைக் கொண்டது. வெப்பத்தை தவிர்ப்பதற்காக இவ்வரண்மனை முழுவதும் தேக்கு மரத்தினால் கட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் சுவர்கள் Canvas Painting-ஆல் திப்பு சுல்தானின் பெருமையை பறைசாற்றுகிறது. பழசாறின் டை-யை கொண்டு வரையப்பட்ட இச்சித்திரங்கள் 200 ஆண்டுகளுக்கு பின்னும் தன் வண்ணமயத்தால் பிரமிக்க வைக்கிறது. அரண்மனையின் உட்புறம் கதவு ஜன்னல் தூண்கள் என அனைத்தும் துல்லியமாக செதுக்கப்பட்டிருக்கிறது. அரண்மனையின் உள்ளே திப்புசுல்தானின் மூதாதையர்களின் படங்கள் பண்டைய கால பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்ருக்கிறது. இதில் திப்பு சுல்தான் உபயோகித்த ஆடைகள் மேசை,நாற்காலி, கட்டில் , துப்பாக்கி, கேனான் மற்றும் பல போர் இயந்திரங்கள் வரை அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள கடிகாரம் பீங்கான் பாத்திரங்கள் அனைத்தும் மைசூரிலேயே யுரோப்பியன் டெக்னாலாஜியை வைத்து தயாரிக்கப்பட்டவை. பட்டாடைகள் மேல் ஈர்ப்படைந்த திப்பு சீனாவிலிருந்து பட்டுப் பூச்சிகளின் முட்டைகளை இங்கு கொண்டு வந்து பட்டு நெய்தலைத் துவக்கி நிலவரிகளின் திட்டத்தை மாற்றியமைத்து பட்டு நெய்தலை வளரச் செய்தார். இதுவே பட்டிற்கு பெயர்போன மைசூர் சில்க் இன்டஸ்டிரி ஆகும்.
ஏவுகணைகளின் ஜாம்பவனாகக் கருதப்படும் திப்புசுல்தான் உலகிலேயே முதல் போர் ஏவுகணைகளைக் கண்டுபிடித்தவர். 1782ல் நடந்த இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்தபோதுதான் போர் ஏவுகணைகளை உபயோகித்தார் திப்பு. போரில் ஒரே சமயத்தில் 5000த்திலிருந்து 6000 ராக்கெட்டுகளை வைத்துத் தாக்கினார். மெட்டலால் ஆன ராக்கெட்டுகளை போரில் எய்தது உலகிலேயே இதுவே முதன் முறையாகும். அன்றைய காலத்தில் ராக்கெட்டுகள் அதிகபட்சம் மூங்கில் கட்டைக்குள் வெடிமருந்தைப் போட்டு செலுத்தப்பட்டன. ஆனால் இவரது ஏவுகணைகள் மெட்டலால் அமைக்கப்பட்டு அதன் பின்புறத்தில் கூர்மையான வால் போன்ற அமைப்பைக் கொண்டது. எனவே இதை எய்ததும் வெடிக்க மட்டுமின்றி அதன் பாதையில் குறுக்கிடும் அனைவரையும் தாக்கி கொண்டே செல்லும். இந்த ஏவுகணைகளே இரண்டாம் மைசூர் போரின் திப்பு சுல்தான் வெற்றிக்குக் காரணம். பிற்காலத்தில் இந்த வகை ஏவுகணையைக் காப்பி அடித்து ஆங்கிலேயர்கள் 1872ம் ஆண்டு அமெரிக்காவை எதிர்த்து போரில் வெற்றி பெற்றனர். இது மட்டுமின்றி மூன்றாம் மைசூர் போரில் “Scorched Earth Policy” அதாவது நம் நாட்டின் வளங்கள் பொருட்கள் மற்றும் நம் மக்களின் சேவையை அந்நியர்களிடம் கொடுத்தல் வாங்குதலை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த முயற்சி அவரது ராஜ்ஜியத்தில் வெற்றிகரமானது. ஆனால் பிற இடங்களில் தோல்வியை சந்தித்தார். இந்தத் தோல்வியை தொடர்ந்து அவரது 2 சாம்ராஜ்ஜியங்களும் கைப்பற்றப்பட்டது. 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட பின்புதான் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அவரது இரண்டு மகன்களும் ஆங்கிலேயர்களால் விடுவிக்கப்பட்டனர். இதுவே ஒரு இந்திய ராஜா ஆங்கிலேயேர்கள் கைப்பற்றிய இடத்தை எழுதித் தந்ததற்கான கடைசி சொத்தாகும். இதைத் தொடர்ந்து நெப்போலியனுடன் கைகோர்த்துக்கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரெஞ்சு புரட்சி ஆரம்பித்த நிலையில் நெப்போலியனால் உதவிக் கரங்கள் நீட்ட முடியவில்லை. 1798ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு சுல்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டி இதில் விரைவில் கைகோர்த்து போராட்டத்தை நீடிக்கலாம் எனக்கோரி நெப்போலியன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அக்கடிதம் ஒரு பிரிட்டீஸ் உளவாளியிடம் மாட்டிக்கொள்ள அந்த கடிதத்தைக் கண்ட General Arthur Wellesley இக்கூட்டணியின் வலிமையைக் கணித்து திப்பு சுல்தானை எதிர்த்து போரிட திட்டமிடத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் 2000 பேர் கொண்ட படை அவரை எதிர்க்க போதாதென்று உணர்ந்த அவர் கூடுதல் படை உதவியை யுரோப்பியர்களிடமிருந்து (4000) மற்றும் ஹைதராபாத் நிஜாமிடமிருந்தும் 16000 பேர் கொண்ட படை உதவியுடன் திப்பு சுல்தானின் கோட்டையை முற்றுகையிட்டனர். திப்பு சுல்தானின் படை எண்ணிக்கை 30,000 மட்டுமே. எனவே திப்பு சுல்தானை அவரது Water Gate எனச் சொல்லப்படும் ரகசிய சுரங்கப்பாதை வழியே தப்பித்து செல்லும்படி ஆலோசனை கூறினர். அதற்கு திப்பு சுல்தான் ‘ஒருநாள் வாழ்ந்தாலும் புலியாக பாயும் வாழ்க்கை 1000 ஆண்டுகள் ஆடாகப் பதுங்கி வாழ்ந்தாலும் இணை ஆகாது” என்று சொல்லிவிட்டு போருக்குச் சென்றார். அவரது தலைநகரமான மைசூரைக் காப்பாற்றுகையில் அவரது உடம்பில் இருந்த தங்க கவசம் மற்றும் பல ஆபரணங்களுக்கு ஆசைப்பட்டு பின்னால் இருந்து தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த போரில் இறந்தவர்களை ஸ்ரீரங்கபட்ணாவில் கும்பாஸ் எனும் இடத்தில் புதைக்கப்பட்டன. திப்பு சுல்தான் இறந்த மறுநாள் மதியம் புதைக்கப்பட்டார். அவரை புதைக்கையில் மிக பலத்த புயல் கிளம்பியதாம். மேகங்களின் கண்ணீரும் காற்றின் கர்ஜனையுடன் திப்பு சுல்தான் புலியாய் பாய்ந்து மடிந்தார்.
பொதுவா அயல் நாட்டுல வேலை செய்றவங்களுக்கு எப்படா ஊருக்கு போவோம்னு இருக்கும் இத படிக்க பொழுது எனக்கு ஊருக்கு போன மாதிரி பீல் வருது
Nice place must see this place in once in life time.
I got this opportunity 3 days before with my family..
And also near many historical places to visit around this..